அமானுஷ்யம் | General Being of Supernatural - Chutti Vikatan | சுட்டி விகடன்

அமானுஷ்யம்

செல்லம்

நெருப்பு கக்கும் டிராகன்

சீனக் கலாச்சாரம் என்ற உடனேயே பலருக்கும் நினைவுக்கு வருவது, டிராகன். மூச்சுக் காற்றில் நெருப்பை வெளியேற்றும் விசித்திரமான பிராணி. சீனாவிலும் சுற்றுப்புற நாடுகளிலும் டிராகன் கொண்டாடப்பட்டாலும் இதைப் பற்றிய கதைகள் உருவானது கிரேக்க நாட்டில். ‘டிராகன்’ என்ற பெயரே, ‘ட்ராகொன்ட்டா’ என்கிற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்ததுதான். அச்சொல்லுக்கு, ‘கவனித்தல்’ என்று பொருள்.

டிராகன் என்கிற விலங்கை யாரும் பார்த்ததில்லை என்பதால் பிற விலங்குகளின் உறுப்புகளை எல்லாம் டிராகன் என்கிற பெயரோடு தொடர்புபடுத்திப் பேசினார்கள். யானையின் தலை, சிங்க நகம், கழுகின் அலகு இப்படி… அதேபோல எல்லா வண்ணங்களையும் டிராகனுக்குப் பூசி மகிழ்ந்தார்கள். மக்கள், தங்களால் சென்று அடைய முடியாத இடங்களில்  டிராகன்கள் வசிப்பதாக நம்பினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick