தமிழ்நாடு பிட்ஸ்

ச.ஜெ.ரவி

பலூன் திருவிழா!

சர்வதேச அளவில், வெளிநாடுகளில் `வெப்பக் காற்று பலூன் திருவிழா’ என்பது விமர்சியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறந்த பொழுதுபோக்கு நிகழ்வாக மட்டும் இல்லாமல், சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காகவும் சர்வதேச அளவில் பலூன் திருவிழா பிரமாண்டமாக நடத்தப்பட்டுவருகிறது. வெளிநாடுகளில் பல நூறு வகையான ராட்சத பலூன்கள் ஒரே நேரத்தில் பறக்கவிடப்பட்டுவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா அண்மைக்காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 4-வது ஆண்டாக இந்த ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா கொண்டாடப்பட்டது. பிரமாண்ட தேசியக்கொடி வடிவிலான பலூன், 2.0 பலூன், ஆங்கிரி பேர்டு பலூன் உள்ளிட்ட 12 ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick