டெக் பிட்ஸ்

ர.சீனிவாசன்

ஒரு படம் - ‘ஜுமான்ஜி: வெல்கம் டு தி ஜங்கிள்’

1995-ம் ஆண்டு வெளிவந்து, 90-களின் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கிளாசிக் படமாகிப் போனது ஜுமான்ஜி. வித்தியாசமான உலகத்தில் விதவிதமான மிருகங்கள், பிரமிப்பூட்டும் சாகசங்கள் எனச் சிறந்த ‘விடுமுறை நாள்’ (கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்கள்) படமாக அது அமைந்தது. 2017-ல், அதே விடுமுறை நாளில், அந்த ஜுமான்ஜியின் கதைக்கருவை மட்டும் வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட புதிய ‘ஜுமான்ஜி: வெல்கம் டு தி ஜங்கிள்’ படம் வெளியானது. இந்தமுறை குழந்தைகளை மட்டுமல்லாது இளைஞர்களையும் கவர வேண்டும் என்ற முனைப்புடன் ‘தி ராக்’ டுவைன் ஜான்சன், ஜாக் பிளாக் போன்ற புகழ்பெற்ற நடிகர்களையும் சேர்த்துக்கொண்டனர். ஆனால், உண்மையில் கிளாசிக் ஜுமான்ஜியின் அருகில் கூட இதனால் செல்ல முடியவில்லை. காரணம், படம் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருந்தாலும், ஒருவித பதற்ற உணர்வைத் தரமறுத்த சாகசக் காட்சிகள் இதற்கான முக்கியக் காரணமாக உள்ளன. ஸாரி ராக்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick