“எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு இது!” - சிலிர்க்கிறார்கள் சுட்டி ஸ்டார்ஸ்!

‘பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம் 2017-18’ திட்டத்தில் தேர்வாகி, தங்களது படைப்புகளால் சுட்டி விகடனில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் சுட்டி ஸ்டார்களுக்கான `மிட் கேம்ப்’ ஜனவரி 7-ம் தேதி உற்சாகமாகத் தொடங்கியது. தமிழகம் முழுவதிலிருந்தும் நம் சுட்டி ஸ்டார்கள் வந்திருந்து, சென்னை எழும்பூரில் உள்ள ‘இன்ஸ்டிட்யூட் ஆஃப் காஸ்ட் அக்கவுன்ட்ஸ் ஆஃப் இந்தியா’ (ICAI) அரங்கத்தில் சந்தித்துக் கொண்டார்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகு நண்பர்களைப் பார்த்த பூரிப்பு, நலம் விசாரிப்பு, செல்ஃபி என அரங்கம் குலுங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick