விளையாட்டு

மு.பிரதீப் கிருஷ்ணா

சதுரங்க நாயகன்!

ஒருவார இடைவெளியில் இரண்டு பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார் விஸ்வநாதன் ஆனந்த். ரியாத்தில் நடந்த உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், டை பிரேக்கர் முறையில் தங்கப்பதக்கம் வென்றார் முன்னாள் உலகச் சாம்பியன் ஆனந்த். இந்தப் போட்டியின்போது உலகச் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை அவர் வீழ்த்தினார். அதன்பிறகு நடந்த உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மூன்றாம் இடம் பிடித்து, வெண்கலப் பதக்கம் வென்றார் ஆனந்த். இந்தத் தொடரில் தங்கம் வென்றது கார்ல்சன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick