சுட்டி மெயில்

சுட்டி விகடன் இதழில் வெளியாகும் ‘இந்த நாள்’ குறிப்புகள் மிகவும் பயனுள்ளவை. கக்கன், கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் மிகவும் சுவாரசியம்.

- குடந்தை மாமு, கும்பகோணம்.

 தமிழ்நாடு செய்திகளில் வெளியான அரசுப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் கொண்டுவரப்படும் என்பது எளிய குடும்பத்தினருக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

- செ.விஷ்ணு ப்ரியா, திருவம்ப நல்லூர்.

சுட்டி விகடன் இதழில் இடையிடையே வரும் ‘தெரியுமா?’ செய்திக் குறிப்புகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

- ஆர்.சுகைல் அகமது, கம்பம்.

சுட்டி விகடனில் வெளிவரும் நொர்ணி நரிஜி, வேதாளம் புதிது, மூன்று கில்லாடிகள், ஜீபாவின் சாகசங்கள் என அனைத்துப் படக்கதைகளும் வெகு சுவாரஸ்யமாக உள்ளன.

- தி.இனியா, சேலம்-5

சுட்டி விகடனில் வெளியாகும் ஆல்பம், உலகம், இந்தியா, தமிழ்நாடு என அனைத்துச் செய்திகளும் கலந்து கொடுப்பது சுவாரஸ்யமாக உள்ளன.

- இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி.

வீணாகப் போன வெண்ணெய்யை வியாபாரம் செய்யச் சொன்ன அதிகாரி, எகிப்திய மியாவ் புராணம் ஆகிய வரலாற்றுச் செய்திகளை சிரிக்க சிரிக்கச் சொல்லும் சரித்திரத் தொடர் அருமை.

- வி.சரோஜா, மேட்டூர் அணை.

யுவராஜ் சாரின் போட்டோ காமிக்ஸ் தொடர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நீதியை போதிக்கிறது. போட்டோக்களும் கதைகளும் சூப்பர்.

- பி.அஸ்வி குமார், காஜியார் தோப்பு, மதுரை-1

பெங்களூரிலிருந்து இன்ஸ்டாகிராமில் அசத்தும் வர்ஷிதாவின் பேட்டி அருமை. டப்மாஷ்களை சிறப்பாகச் செய்யும் வர்ஷிதாவுக்கு வாழ்த்துகள்.

- சு.ஸ்ரீகாந்த், சின்ன சேலம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick