கனவு ஆசிரியர் பகவான்! - நெகிழும் மாணவர்கள்

பெருமிதம்தமிழ்பிரபா

மிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் நெகிழ்வுடனும் ஆச்சர்ரியத்துடனும் பேசப்படும்  கனவு  ஆசிரியர் பகவானையும், ஆசிரியர் எங்கள் பள்ளிக்கூடத்தை விட்டுப் போகவே கூடாதென்று அன்புக் கோட்டைக் கட்டி அவரைத் தடுத்து நிறுத்திய, அந்த மாணவ மாணவிகளையும், சந்திப்பதற்காக வெளியகரம் கிராமத்துக்குச் சென்றேன்.

திருத்தணியிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் சோமேஸ்வரன் மலையடிவாரத்தில் இருக்கிறது வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளி. பள்ளிக்குள் நாங்கள் கேமராவுடன் சென்றதும், “அண்ணா, எங்க சார் ஸ்கூலைவிட்டுப் போறாரா? சொல்லுங்க’’ என மாணவர்கள் அனைவரும் எங்களைச் சூழ்ந்து கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டனர். எதுக்கு உங்க சாரை இவ்ளோ பிடிச்சிருக்கு? எனக் கேட்க... ஒவ்வொரு பிள்ளைகளும் பேச ஆரம்பித்தனர்.

“பகவான் சார் ஏன் எனக்குப் பிடிக்கும்னா. வெளிய போனா எப்படி நடந்துக்கணும், எப்படி பேசணும்னு சொல்லித் தருவாரு. தாங்க்ஸ், சாரி இதெல்லாம் எதுக்கு சொல்லணும் சொல்லக் கூடாதுன்னு பாடத்துக்கு நடுவிலேயே அப்போ அப்போ சொல்லிக் கொடுப்பாரு. அவரு எங்க ஸ்கூலை விட்டு போறதை ஏத்துக்கவே முடியலை அண்ணா. அவர்கிட்ட போக வேணாம்னு சொல்லுங்க அண்ணா” என என் கைகளைப் பிடித்து அழுத ஏழாம் வகுப்புச் சிறுவன் லோகேஷை என்ன சொல்லி சமாதானப்படுத்துவதென்று தெரியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick