சுட்டி மெயில்

‘சுட்டி ஸ்டார் நியூஸ்’ல் இடம் பெறும் அனைத்துத் தகவல்களும் வித்தியாசமாகவும் படிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டும் விதத்திலும் உள்ளன.

- க.இராமச்சந்திரன், வாழப்பட்டு, நெல்லிக்குப்பம்.

‘சிரிக்க சிரிக்க சரித்திரம்’ படித்தேன், என்னுடன் படிக்கும் நண்பன், வாயில்லா ஜீவனைத் துன்புறுத்துவான். இதைக் காண்பித்தவுடன் படித்துவிட்டு  விலங்குகளைத் துன்புறுத்துவதை நிறுத்திவிட்டான்.

-பெ.ஐயப்பன், தேவகோட்டை.

னவு ஆசிரியர் பற்றிய கவர் ஸ்டோரி படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இதுபோலப் பள்ளிக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் நன்றாக இருக்கும்.

- ப.மீனாட்சி, தலக்குளம், கன்னியாகுமரி.

சென்ற இதழில் வெளியான படக்கதைகள் ஐந்தும் சுவைமிகு ‘பஞ்சாமிர்தமாக’ இருந்தன. இதழில் அங்கங்கே இடம் பெற்றிருந்த ‘தெரியுமா?’ ஒரு வரி தகவல்கள் எங்களின் பொது அறிவை மேலும் வளர்க்க உதவின.

- ஆ.பிரியதர்ஷினி, ரெட்டியார்பட்டி, திருநெல்வேலி.

வால்களைச் சாதனையாக்கித் தங்கங்களை வென்ற அந்த ‘சுட்டி தங்கங்களுக்கு’ மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

-கு .சிவப்பிரியா, மயிலாடுதுறை.

நாம் பாராட்டுக்கு ஏங்குவது போலவே நம்மிடமிருந்து பாராட்டு கிடைக்காதா என்று ஏங்குவோர் பலர் இருப்பர் என்பதை ‘பாராட்டுவதே பண்பு’ என்ற சிறுகதை விளக்கியிருந்தது.

- ஆர்.ஜெயப்ரணவ், புதுச்சேரி.

சுட்டி விகடனில் இடம்பெறும் துணுக்குச் செய்திகள் அனைத்துமே போட்டித் தேர்வுக்கு உதவும் என்பதே உண்மை.

- சி.கார்த்திகேயன், சாத்தூர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick