சேலம் 150 - இன்ஃபோ புக்

மலைசூழ் மாநகர் சேலம்!

மலைகளால் சூழ்ந்த எழில்வாய்ந்த மாவட்டம் சேலம். ஒரு காலத்தில் தமிழகத்தில் முதல் பெரிய மாவட்டமாக இருந்த அது, இன்று நான்கு மாவட்டங்களாகச் செயல்பட்டுவருகிறது. கடின உழைப்பு, கனிவான உபசரிப்பு, எளிய வாழ்க்கைச்சூழல், மண் சார்ந்த பொருளாதாரம் ஆகியவை சேலத்தின் சிறப்பியல்புகள், திரும்பிய திக்குகளில் எல்லாம் மலைகளும்,  குன்றுகளும் இம்மாவட்டத்தை அழகு செய்கின்றன. இங்கு உள்ள மலைகளில், ஒரு காலத்தில் சந்தன மரங்கள் மண்டிக்கிடந்ததாக செய்திகள் உண்டு.

சேலம் மாநகர், மாவட்டத்தின் மையப் பகுதியில் இருப்பதால், ஒரு மணி நேரத்தில் எங்கிருந்தும் தலைநகருக்கு வந்துவிடலாம் என்கிற நிலைமை. போக்குவரத்திலும் அழகு வாய்ந்த பேருந்துகள், தரமான சாலைகள் ஆகியவை சேலத்துக்குச் சிறப்பு. கைத்தறி, வெள்ளிக் கொலுசு, மாம்பழ வியாபாரம், ஜவ்வரிசி உற்பத்தி என்று இந்தியா முழுவதும் அறியப்பட்ட தொழில்கள் இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்