சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 5

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ரீவைண்ட்முகில்

எரியும் தாடி! பறக்கும் தொப்பி!

தினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புகழுடன் விளங்கிய இங்கிலாந்தின் கடற்கொள்ளையன் பெஞ்சமின் ஹார்னிகோல்ட். கடலில் அவனது கப்பல் தெரிகிறது என்றாலே மற்ற வணிகக் கப்பல்களுக்கும், பயணிகள் கப்பல்களுக்கும் வியர்க்க ஆரம்பித்துவிடும். அவ்வளவு பயங்கரமானவன். கொடுமைக்காரன்.

கி.பி. 1717-ல், ஹோண்டுராஸ் கடற்பகுதியில் வணிகக் கப்பல் ஒன்றை பெஞ்சமின் தலைமையிலான கடற்கொள்ளையர்கள் சூழ்ந்துக்கொண்டார்கள். பெஞ்சமின் தலைமையில் கையில் ஆயுதங்களுடன் அந்த வணிகக் கப்பலுக்குள் கொள்ளையடிப்பதற்காகக் குதித்தார்கள். அந்த வணிகர்கள் இன்றைக்கு எத்தனை பேர் தலை உருளப்போகிறதோ என்று பயத்தில் கண்ணீர் விட ஆரம்பித்தார்கள். சிலர் கெஞ்சவும் செய்தார்கள். ‘தயவுசெய்து எங்களை விட்டுவிடுங்கள். கொன்றுவிடாதீர்கள்!’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick