டிராகுலாவின் சுற்றுலா! - அனிமேஷன் அசத்தல் | Hotel Transylvania - hollywood movie review - Chutti Vikatan | சுட்டி விகடன்

டிராகுலாவின் சுற்றுலா! - அனிமேஷன் அசத்தல்

சினிமாகார்த்தி

முதல் படத்துக்கும் (2012), இரண்டாம் படத்துக்கும் (2015) மூன்று ஆண்டுகள் இடைவெளி விட்டதைப்போல, இந்த முறையும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாதம் வெளியாகிறது ஹோட்டல் டிரான்ஸில்வேனியா 3.

காலம் காலமாகக் குழந்தைகளுக்குச் சாப்பாடு ஊட்ட, “மூணு கண்ணன் வாரான்; பேய் வந்துடும்’’ என மிரட்டித்தான் ஊட்டுவார்கள். அதன் உல்ட்டாதான் ஹோட்டல் டிரான்ஸில்வேனியாவின் கதை.
 
மனிதர்களுக்கு பயந்து பயந்து வாழ்கின்றன பூதங்கள். கௌன்ட் டிராகுலாவின் மனைவி மார்த்தாவை மனிதர்கள் கொலை செய்துவிட, மனிதர்களை வெறுக்கிறார் கௌன்ட் டிராகுலா.  டிராகுலாக்கள் நிம்மதியாக இருக்கவே ஹோட்டல் ஒன்றை நடத்துகிறார் கௌன்ட். டிராகுலாக்களும் பூதங்களும் அங்கு வந்து ஜாலியாக டைம்பாஸ் செய்கிறார்கள். டிராகுலாவின் மகள் மேவிஸுக்கு 118 வது (ஆம் 118) பிறந்தநாள். அதை விமர்சையாகக் கொண்டாட நினைக்கிறார் டிராகுலா. மகளுக்கோ ஹோட்டலைவிட்டு வெளியே சென்று, மனிதர்களை ஒருமுறையேனும் பார்க்க வேண்டும் என்று  ஆசை. மகள் முன் பூதங்களையே மனிதர்களாகச் சித்தரித்து ஏமாற்றிவிடுகிறார் டிராகுலா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick