கேள்வி கேளுங்கள்... சிந்தியுங்கள்... ஆயிரம் புதியவற்றை உருவாக்கலாம்! | Young talents of Chutti Vikatan - Chutti Stars welcome event - Chutti Vikatan | சுட்டி விகடன்

கேள்வி கேளுங்கள்... சிந்தியுங்கள்... ஆயிரம் புதியவற்றை உருவாக்கலாம்!

துள்ளல், துடிப்பு, தெளிவு என ஒருநாள் திருவிழாவாக இந்த ஆண்டும் நடைப்பெற்றது. ‘பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’ நிகழ்ச்சி. இனி வரும் சுட்டி விகடனில் தங்கள் படைப்புகளால் கலக்கப்போகும் 55 சுட்டி ஸ்டார்களும், நிகழ்ச்சி நடந்த சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பெற்றோருடன் ஆஜராகினர். ‘இந்த முழு நாளும் உங்களுக்கானது. நல்லா என்ஜாய் பண்ணுங்க’ என்றதும் தயாரானார்கள். நிகழ்ச்சியில் நடந்த விஷயங்களை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா? வாங்க, உள்ளே அழைச்சுட்டுப் போறேன்.

கேளுங்க... சிந்தியுங்க... உருவாக்குங்க!

‘`படிப்பு என்பது என்ன தெரியுமா? பாடப் புத்தகங்களில் இருக்கிறதை மனப்பாடம் பண்ணி, பரீட்சையில் 100 மார்க் எடுக்கிறதில்லே. கேள்விகள் கேட்பதும், அந்தக் கேள்விகள் வழியே சிந்திப்பதும், அந்தச் சிந்தனைகள் மூலம் புதியதை உருவாக்குவதுமே உண்மையான படிப்பு. ஐன்ஸ்டீன், மேரி க்யூரியில் ஆரம்பிச்சு, ஸ்டீவ் ஜாப், சுந்தர் பிச்சை வரை கேள்விகளால் புதியவற்றை உருவாக்கினவங்கதான். நீங்களும் அப்படியான ஆளுமைகளாக வர முடியும்’’ என உத்வேகத்துடன் ஆரம்பித்தார், ‘ஹெலிக்ஸ்’ மனிதவள மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் சேர்மன் செந்தில்குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick