இன்னிக்கு ஆக்டர்... டான்ஸர்... நாளைக்கு சயின்டிஸ்ட்! - ஆல்ரவுண்டர் யுவினா | Jolly Interview with Multi talented Child Actress Yuvina - Chutti Vikatan | சுட்டி விகடன்

இன்னிக்கு ஆக்டர்... டான்ஸர்... நாளைக்கு சயின்டிஸ்ட்! - ஆல்ரவுண்டர் யுவினா

கவர் ஸ்டோரிவெ.வித்யா காயத்ரி

வங்களுக்குப் பிடிச்ச பல விளம்பரங்களில் க்யூட்டா வருவாங்க... ஸ்மார்ட்டா சிரிப்பாங்க... சூப்பரா டான்ஸ் பண்ணுவாங்க. யாரா இருக்கும்னுதானே யோசிக்கிறீங்க, ‘வீரம்’ படத்தில், குட்டி பாப்பாவா நடிச்சு அசத்திய யுவினா பார்த்தவி. இந்த யுவினாவின் திறமைகளை லிஸ்ட் போட ஆரம்பிச்சோம்னா, நீ...ளமா போயிட்டேயிருக்கும்.  அப்படி என்னவெல்லாம் யுவினாவுக்குத் தெரியும்? வாங்க, அவங்ககிட்டேயே கேட்கலாம்.

நாம், யுவினா வீட்டில் அவரை சந்தித்த போது, தன் தம்பி பிரணவ்வுக்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுத்துட்டிருந்தார். ‘`உங்களுக்கு ஓவியம் வரையத் தெரியுமா?’’னு கேட்டதும், ‘`எனக்குத் தெரிஞ்சதையெல்லாம்  சொல்றேன், பக்கத்துல உட்காருங்க, அக்கா’’ எனப் புன்னகையுடன் பேச ஆரம்பித்தார்.

‘`நான் ஐந்தாம் வகுப்பு போறேன். வீட்டில் என்னோடு, அம்மா, அப்பா, தம்பி. மூன்றரை வயசிலேயே, ‘உறவுக்குக் கை கொடுப்போம்’ சீரியலில் என்ட்ரி ஆனேன். அந்த சீரியலின்போது, எனக்கு சரியா தமிழ் பேசத் தெரியலை, வேண்டாம்னு பலரும் சொன்னாங்க. அப்போ, ஏவி.எம் சரவணன் சார்தான், ‘இந்தப் பாப்பா செம்மையா நடிக்குது’னு சொல்லி வாய்ப்பு கொடுத்தார். அந்த சீரியலில், ஆவி எனக்குள் புகுந்து மாமியாராக நடிச்சது ரொம்ப ரீச் ஆச்சு. 100 எபிசோடுக்கு மேலே நடிச்சேன். அந்த சீரியல் மூலமா சினிமா வாய்ப்பு கிடைச்சது’’ எனச் சொல்லியபடித், தம்பியை தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்தார் யுவினா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick