சுட்டி மெயில்

சிரிக்க சிரிக்க சரித்திரம் பகுதியில் தக்காளியின் ஆரம்ப காலத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

- ஆர்.தாழை அரசன், தேனி..

டக்கதைகள் சுட்டி விகடனின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. சின்னச் சின்ன செய்திகளின் தொகுப்பு அருமை.

- ரா.அலமேலு, கீழ் மேட்டூர்.

டந்த இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டி எங்கள் அறிவுக்குச் சவால்விட்டது. நாங்கள் குழுவாக உட்கார்ந்து விவாதித்துப் புதிரை விடுவித்தோம்.

- சி.காவியா, தேவகோட்டை.

 செ
ன்ற இதழுடன் கொடுத்த சுட்டி க்ரியேஷன்ஸ் ‘ஹாட் ஏர் பலூன்’ சூப்பராகச் செய்தேன். அதைக் கயிற்றில் கட்டி ஹாலில் தொங்கவிட்டுள்ளேன். நன்றி சுட்டி விகடன்.

- மு.சபரி, தேவகோட்டை.

மொழி அறிவோம் பகுதியைப் படிப்பதன்மூலம் பல மொழிகளைக் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கிறது.

- கு.சிவப்பிரியா, மயிலாடுதுறை.

போன இதழில் வந்த யுவினாவின் பேட்டி சூப்பர். இப்போதைய சுட்டிகள் படிப்புடன் கூடவே தங்களுக்கென ஒரு தனித் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும், என்பதைத் தெரிந்து கொண்டேன்.

- வி.சஞ்சனா, சென்னை-44.

டக்கதைகளில் எனக்கு நொர்ணி நரிஜி, வேதாளம் புதிது, ஜீபாவின் சாகசம் ஆகியவை ரொம்பப் பிடிக்கும்.

- எஸ்.வளர்மதி, கொட்டாரம் அஞ்சல்.

மைதி அமைதி போட்டோ படக்கதை அருமை. நடித்த சுட்டிகளின் முகபாவங்கள் இயல்பாக இருந்தன.

- என்.ஜெயம் ஜெயா, கோவை- 641 104.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்