இந்தியா | Latest News in India - Chutti Vikatan | சுட்டி விகடன்

இந்தியா

என். சொக்கன்

வினாத்தாள் பிரச்னைக்கு விடை!

இந்த ஆண்டு CBSE தேர்வுகளின் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இனிமேல் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடைபெறாமலிருக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று அரசு தீர்மானித்துள்ளது. மத்தியப் பள்ளிக்கல்விச் செயலாளர் அனில் ஸ்வரூப் இந்த முயற்சிகளைப் பற்றிச் சமீபத்தில் விரிவாகப் பேசினார்.

எடுத்துக்காட்டாக, வினாத்தாள்களை முன்கூட்டியே அச்சிடாமல் குறுந்தகடுகளில் பதிவுசெய்து அனுப்பப்படும். இந்தக் குறுந்தகடுகள் தேர்வு நடைபெறுவதற்குச் சற்று முன்பாகத்தான் பள்ளிகளுக்கு வழங்கப்படும். இதன்மூலம் வினாத்தாள்கள் கசிவதைக் கட்டுப்படுத்தலாம்.

இன்னொரு முயற்சி, ஒவ்வொரு வினாத்தாளிலும் அது எந்தத் தேர்வு மையத்துக்காக அனுப்பப்பட்டது என்ற விவரத்தை `வாட்டர் மார்க்’முறையில் சேர்ப்பது. ஒருவேளை வினாத்தாள் வெளியானாலும், அது எங்கிருந்து பெறப்பட்டது என்பதைக் கண்டறிய இயலும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick