தமிழ்நாடு

ஜெ.ரவி

நீராவி இன்ஜின் ரயிலில் உற்சாகப் பயணம்!

மின்சார ரயில், மெட்ரோ எனப் பயணிக்கும் இந்தத் தலைமுறையினருக்கு நீராவி இன்ஜின்மூலம் இயக்கப்படும் பழைமையான ரயில் பற்றி அறிவதுடன் அதில் பயணிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது ரயில்வே நிர்வாகம். 163 ஆண்டுகள் பழைமையான நீராவி ரயில் இன்ஜின் மூலம் இயக்கப்படும் சிறப்பு ரயில் சென்னையில் மூன்று வாரங்களாக இயக்கப்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் ரயில் நிலையம் வரை இந்த ரயில் இயக்கப்பட்டது. பயணிகள், நீராவி இன்ஜினை வியப்பாகப் பார்த்து ரசித்தனர். ஆர்வத்தோடு ரயிலில் பயணம் செய்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். இந்திய ரயில்வே பாரம்பர்யத்தை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் உலகிலேயே பழைமையான நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த இந்த ரயில் தற்போது இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick