டைனோசருக்கும் டைனோசருக்கும் சண்டை!

சினிமாகார்த்தி

ஜுராஸிக் பார்க் என்றதும் ஓராயிரம் விஷயங்கள்  நம் நினைவுக்கு வரும். பென்சில் பாக்ஸ், ரைட்டிங் பேட், லேபிள், வாட்டர் பாட்டில் ,  டி- ஷர்ட் என நாம் பயன்படுத்தும் பல விஷயங்களில் டைனோசர்களைப் பார்த்திருப்போம். பல காலம் முன்பே அழிந்து போன டைனோசர்களை வைத்து ஹாலிவுட் செம வசூல் செய்கிறது. ஜுராஸிக் பார்க் படங்களின் கதை ரொம்பவே சிம்பிள்.

க்ளோன் செய்யப்பட்ட டைனோசர்களை வைத்து ஒரு தீம் பார்க் செய்ய முற்படுகிறார்கள். அதில், சில அசம்பாவிதங்கள் நடந்துவிட, அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

ஜுராஸிக் பார்க் படங்களின் நிலப்பரப்பான ஐலா நுப்லார் தீவில் இருக்கும் எரிமலைகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருக்கிறது. ஜுராஸிக் பார்க் படங்களில் எப்போதும் தலைகாட்டும் அயன் மால்கம் டைனோசர்கள் எரிமலையில் அழிந்துவிடட்டும், அதுதான் இயற்கையின் விருப்பம் எனச் சொல்ல, ‘ஜுராஸிக் பார்க்’கினுடைய  சொந்தக்காரர்கள் அவற்றைக் காப்பாற்ற வேண்டும் என விருப்பப்படுகிறார்கள்.

வழக்கம்போல், படத்தின் நாயகன் (கிறிஸ் பிராட் ), நாயகி, மற்றும் பலர் இணைந்து ஐலா நுப்லார் தீவுக்குச் செல்கிறார்கள். அங்கு டைனோசர் ப்ளூவைக் கண்டுபிடிப்பதுதான் முதல் வேலை. இவர்களுடன் பயணிக்கும் குழு, இவர்களுக்கே தெரியாமல் வேறொரு நாச வேலைக்குத் திட்டம் தீட்டியிருக்கிறது. கிறிஸ் பிராட்டின் அணியைத் தீவிலேயே விட்டுவிட்டு, டைனோசர்களுடன் தப்பிக்கிறது வில்லன் டீம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick