உலகக்கோப்பை கால்பந்து திருவிழா! - 2018 | 2018 FIFA World Cup Russia - Chutti Vikatan | சுட்டி விகடன்

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா! - 2018

விளையாட்டுமு.பிரதீப் கிருஷ்ணா

ஷ்யாவில் வெற்றிகரமாகத் தொடங்கிவிட்டது ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை. மிகப்பெரிய திருவிழாவுக்கு மொத்த உலகமும் தயாராகிவிட்டது. ஒரு மாதம் நடக்கும் இந்தத் தொடரைப் பார்க்க, கால்பந்து ரசிகர்கள் ரஷ்யாவுக்குப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

நடப்புச் சாம்பியன் ஜெர்மனி உட்பட பிரேசில், ஸ்பெயின், அர்ஜென்டினா, இங்கிலாந்து என 32 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. இந்த அணிகள் எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இறுதிப் போட்டி ஜூலை 15-ம் தேதி மாஸ்கோவில் நடைபெறும்.

இந்தத் தொடருக்காக, 11 நகரங்களில் 12 மைதானங்களை உலகத்தரத்தில் தயார்செய்துள்ளது ரஷ்யா. அதில் இறுதிப் போட்டி நடக்கும் லுஸ்னிக்கி ஸ்டேடியம் 81,000 ரசிகர்கள் உட்கார்ந்து பார்க்கலாம். உலகக்கோப்பை தொடக்க விழாவும் இங்குதான் நடைபெற்றது. உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு, 38 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

ஸபிவாகா - மஸ்கட்

ஒவ்வொரு பெரிய விளையாட்டுத் தொடருக்கும் `மஸ்கட்’ என்ற அடையாளச் சின்னம் இருக்கும். இந்த உலகக்கோப்பைக்கான அடையாளச் சின்னமாக ரஷ்யா தேர்ந்தெடுத்திருப்பது `ஸபிவாகா’ என்கிற ஓநாய். பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த ஓநாயை வடிவமைத்தவர், ரஷ்ய மாணவரான எகாதெரினா பொசரோவா (Ekaterina Bocharova). அனைவரின் கவனத்தையும் ஈர்க்கப் பயன்படுத்தும் இந்த மஸ்கட் பொம்மைகளின் விற்பனை ஏற்கெனவே படுஜோர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick