பரீட்சையில் பட்டையைக் கிளப்ப... ஹெல்த் டிப்ஸ்!

ன்புச் சுட்டி நண்பர்களே...

வணக்கம்.

பரீட்சைக்கு மிக நெருக்கத்தில் வந்துருப்பீர்கள். அரட்டை, விளையாட்டு, தொலைக்காட்சி என எல்லாவற்றையும் சில பல அடிகள் தள்ளியே வைத்திருப்பீர்கள். சிந்தனை முழுவதும் பரீட்சைப் பக்கம் திரும்பியிருக்கும் இந்தநேரத்தில், ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதுதான், ஆரோக்கியம்.

உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தான், தேர்வுப் பாதையில் வெற்றி இலக்கை எட்ட முடியும். நம் உடல்தான் பயணத்துக்கான வாகனம். அதைச் சரியாகப் பராமரித்தால்தான், உங்கள் பயணம் தடையின்றி நினைத்த இடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும். பரீட்சைக்குப் படிக்கிறேன் என்கிற பரபரப்பில், உடல் ஆரோக்கியத்தில் அசட்டையாக இருந்தால், வாகனம் பாதியில் நின்றுவிட்டால் என்ன செய்வது? அதை மனதில்கொண்டு, அக்கறையுடன் இந்த இணைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick