திருநின்றவூருக்கு வந்த ‘கடல் பூதம்!’

அறம் செய விரும்புஅறம்வி.எஸ்.சரவணன்

‘ Welcome’ என்று எழுதி அதைச் சுற்றிப் பூக்களால் அழகாக அலங்காரம் செய்திருந்த அந்தப் பள்ளியின் வரவேற்பே, வாசம் வீசியது. அத்துடன் பல வண்ணங்களில் கோலங்கள் அசத்தின. அது, சென்னை, திருநின்றவூரில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி. ஆனந்த விகடன், ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் இணைந்து செயல்படுத்திவரும் ‘அறம் செய விரும்பு’ திட்டத்தில், இந்தப் பள்ளிக்கு, மாணவர்கள் அமரும் இருக்கையுடன் 195 டெஸ்க்குகளும், நூலகத்துக்கு அழகான பீரோவும் வழங்கத் திட்டமிருந்தோம். அவற்றைப் பள்ளிக்கு வழங்கவும், உலக நாடக தினத்தை இணைத்துச் சிறப்பான ஒரு விழாவாகக் கொண்டாடினோம். பணி ஓய்வுபெற இருக்கும் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், பாலசுப்பிரமணியனுக்கு ஆளுயர மாலையை அணிவித்துச் சிறப்பித்தனர் மாணவர்கள். தாங்களே உருவாக்கிய நாடகத்தையும் நடித்துக்காட்டி அசத்தினார்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick