சுட்டி கதை சொல்லிகள்!

கதை சொல்லிவி.எஸ்.சரவணன்

‘சென்னை, குன்றத்தூரில் இருக்கிறது, பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி. அங்குள்ள மர நிழலில், சிங்கம், புலி, கரடி, யானை, கோமாளி எனப் பல கதாபாத்திரங்கள் பங்கேற்ற கதை விழா நடந்தது. பொதுவாக, வகுப்புகளை    எல்.கே.ஜி, யூ.கே.ஜி என்றுதான் சொல்வார்கள் ஆனால், இங்கே, துளிர், தளிர் என்றுதான் அந்த வகுப்புகளைக் குறிப்பிடுகிறார்கள். துளிர் தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 25 பேர், விதவிதமான கதைகளைச் சொல்லி அசத்தினார்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் ரிஸ்வானா, தனது கதைக்கேற்ற உருவங்களையும் அரண்மனையையும் அட்டையில் வரைந்து வைத்திருந்தாள். அந்தக் கதாபாத்திரங்கள் வரும்போதெல்லாம் உருவ அட்டைகளைக் காண்பித்து, கதை ஒன்றைச் சொல்லி வியக்கவைத்தாள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick