தமிழ்நாடு | Latest Tamil Nadu Current Affairs - Chutti Vikatan | சுட்டி விகடன்

தமிழ்நாடு

ஜெ.ரவி

ஒரே நேரத்தில் 1.75 லட்சம் மாணவர்கள் தமிழ்படித்துச் சாதனை!

தி
ருவண்ணாமலை மாவட்டத்தில், ஒரே நேரத்தில் 1.75 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழ்ப் படித்து, எழுதி உலக சாதனை நிகழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், இரண்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்வித் திறனைச் சோதித்து, தமிழ்ப் படித்தல் திறனை ஆய்வுசெய்து இந்த உலக சாதனை முயற்சி நடந்தது. 85 ஆயிரம் மாணவர்கள், 90 ஆயிரம் மாணவிகள் என 1.75 லட்சம் பேர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் 470 மையங்களில் 1.75 லட்சம் மாணவர்கள் ஒன்றுதிரண்டு, ஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும் எழுதியும் இந்தச் சாதனையை நிகழ்த்தினர். கடந்த 2003-ம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில், ஒரே நேரத்தில் 72 ஆயிரம் மாணவர்களை வைத்துச் செய்தித்தாள் வாசிக்கும் நிகழ்ச்சியே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையைத் திருவண்ணாமலை மாணவர்கள் முறியடித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick