பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்! - 2018 - 19

11-ம் ஆண்டு சுட்டி ஸ்டார்ஸ் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்!

அன்பு நண்பர்களே...

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த, ‘பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’ பயிற்சித் திட்டம், இதோ வந்துவிட்டது!

இந்தப் பயிற்சித் திட்டத்தில் தேர்வுபெற்று, புதிய அனுபவங்களைச் சந்திக்கவும் சாதனைகள் புரியவும் தயாரா? உங்கள் ஊரில் இருந்தபடியே பத்திரிகையில் சாதனை புரிய, வாய்ப்பு ஏற்படுத்தித்தருகிறது சுட்டி விகடன்.

இந்தப் பயிற்சியில் சேர, நீங்கள் இந்த ஆண்டு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிப்பவராக இருக்க வேண்டும்.

கடந்த 10 வருடங்களில் சுட்டி ஸ்டார்களாகத் தேர்வானவர்கள், தமிழில் எழுதுவதிலும் புத்தகங்கள் படிப்பதிலும் சிறப்பான முன்னேற்றமடைந்து, தன்னம்பிக்கையுடன் மிளிர்கிறார்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் நீங்களும் இணையலாம்.

இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

எதிர்ப் பக்கத்தில் இருக்கும் விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை எழுதி இணைத்து, சுட்டி விகடன் அலுவலகத்துக்கு அனுப்புங்கள்.
உங்கள் விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 10.06.2018  அனைவருக்கும் வாழ்த்துகள்!

இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, உங்கள் திறமைகள் என்னென்ன என்பதையும் தனியாக ஒரு தாளில் எழுதி, விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்புங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்