சேதுபதி மாமாவுக்கு செல்லம், தனுஷ் மாமாவுக்கு ஃப்ரெண்டு! - மாஸ்டர் ராகவன் கலகல | Master Raghavan talks about Vijay Sethupathi and Dhanush - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2018)

சேதுபதி மாமாவுக்கு செல்லம், தனுஷ் மாமாவுக்கு ஃப்ரெண்டு! - மாஸ்டர் ராகவன் கலகல

வெ.வித்யா காயத்ரி

‘மணி... மணி... மணி... மணி... முனி... முனி... மணி... முனி... மணி... முனி....’ - சம்மர் லீவில் இருக்கும் சுட்டிகளின் லேட்டஸ் ரைம்ஸ் இதுதான்.

‘என்ன முனி? என்ன மணி?’ எனக் கேட்கிறீர்களா? தப்பித் தவறி உங்க ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்டுடாதீங்க. ‘அச்சச்சோ... வேற்றுக்கிரகத்திலிருந்து வந்திருக்கியா?’னு கலாய்ச்சுடுவாங்க. ‘ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியின் புரொமோ அது. அந்த புரமோவில், காலிங்பெல் அடித்து கதவு திறந்ததும், குட்டிப் புயலாக உள்ளே நுழைகிறார் மாஸ்டர் ராகவன். அந்தப் பாட்டைப் பாடி, ‘எத்தனை முனி... எத்தனை மணி?’ எனக் கேட்டுக் கிறுகிறுக்க வைக்கிறார். இதுதான் இப்போ எல்லாச் சுட்டிகளின் நாக்குகளிலும் சுற்றி சுற்றி அடிக்குது.

இந்த விளம்பரத்தில் வரும் மாஸ்டர் ராகவன் ‘சேதுபதி’ படத்தில், விஜய் சேதுபதி மகன் ‘மாறனாக’ ஈர்த்தவர். ‘றெக்க’ படத்தில், ‘மாலாக்கா ஐ லவ் யூ’ என க்யூட் ரியாக்‌ஷன் கொடுத்தவர். இப்போது, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘மாரி 2’ என இந்தக் குறும்புச் சுட்டி செம பிஸி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close