ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... | Editorial page - Chutti Vikatan | சுட்டி விகடன்

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

ங்கள் செல்லத் தோழன் சுட்டி விகடனுக்கு இது 20-ம் ஆண்டு. இன்றைய டிஜிட்டல் வேகத்தில், ஒரு சிறுவர் பத்திரிகை 20 ஆண்டுகளைத் தொட்டுத் தொடர்வது சவாலான விஷயம். அந்தச் சவாலை சுட்டி விகடன் அழகாகக் கடந்திருப்பதற்கு முதல் காரணம், உங்களது உற்சாகமான ஆதரவுதான். ஏராளமான கார்ட்டூன் சேனல்கள்,  தாராளமான வீடியோ கேம்ஸ் என விர்ச்சுவல் உலகம் விரிந்திருக்கும்போதும், புத்தகம் படிக்க வேண்டும் என்ற உங்களது எண்ணமும் அந்த ரசனையின் சுவையை உணர்ந்திருப்பதும்தான். அதற்கு, வாசகர்களாகிய உங்களுக்கு எங்கள் முதல் நன்றி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick