மூக்கு நீண்ட குருவி - புத்தக விமர்சனம்

யுவா

த்தனை சூப்பர் ஹீரோஸ் வந்தாலும், சுட்டிகளின் சூப்பர் ஸ்டார்ஸ் எப்பவுமே அனிமல்ஸ்தான் இல்லையா?

‘ஒரு காட்டுல ஒரு நரி’ என ஆரம்பிச்சாலே, கவனம் முழுக்க கதை சொல்றவங்க பக்கம் போயிடும். விலங்குகளின் கதைகள், திரைப்படங்கள் எப்பவுமே மெகா ஹிட். இந்தப் புத்தகத்தின் ஆசிரியரும் அதையேதான், ‘குழந்தைகள் அனைவரும் விலங்குகளின் உலகத்தைத் தங்கள் உலகமாக நினைக்கிறார்கள்’ எனச் சொல்றார். இந்தத் தொகுப்பின் 11 கதைகளிலும் அணில், குரங்கு, தேவாங்கு, எறும்பு, வண்ணத்துப்பூச்சி, குருவி எனக் குட்டி குட்டி க்யூட் உயிரினங்களே ஹீரோக்களாக வர்றாங்க. கதையின் நடையும் கருத்துகளும் அறிவுரைகளாக இல்லாமல் அழகா இருக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick