மிக்கி 90 - மெகா கொண்டாட்டம்

டந்த 60 ஆண்டுகளில், ஏறக்குறைய அனைத்து அமெரிக்க அதிபர்களும் இவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்கள். அந்த விஐபி யார் தெரியுமா? வால்ட் டிஸ்னி உருவாக்கிய, மிக்கி மவுஸ். அந்த  எலியாருக்கு நவம்பர் 18-ம் தேதியுடன் 90 வயது ஆகிறது. உலகம் முழுக்க, மிக்கி மவுஸின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சுறுசுறுப்பாகி இருக்கிறது.

மிக்கி மவுஸ் உருவான கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். யுனிவர்சல் நிறுவனத்தில் பணியாற்றிவந்த வால்ட் டிஸ்னி, அங்கிருந்து வெளியேறி, தன்னுடைய ஆஸ்தான ஓவியர் அப் ஐவர்க்ஸ் மற்றும் வில்ஃரெட் ஜாக்சனுடன் இணைந்து புதிய நிறுவனத்தைத் தொடங்கினார். புதிய கதாபாத்திரங்களை உருவாக்க விவாதித்தார். ஐவர்க்ஸ் வரைந்த பாத்திரம்தான், மிக்கி மவுஸ். டிஸ்னி பணிபுரிந்த அலுவலகத்து மேஜையில் ஓர் எலி அடிக்கடி வந்துசெல்லும். அதனுடைய சேட்டைகள்தான் கதை. முதலில், ‘மார்ட்டைமர் மவுஸ்’ என்றே டிஸ்னி பெயரிட்டார். மனைவி பெயரை மாற்றும்படி சொன்னதால், மிக்கி மவுஸ் என்றானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick