ஆட்டம், பாட்டம், நூலகம்! | Kids program by Vasaka saalai organisation - Chutti Vikatan | சுட்டி விகடன்

ஆட்டம், பாட்டம், நூலகம்!

மைதி என்றதும் நினைவுக்கு வரும் இடங்களில் முக்கியமானது, நூலகம். ஆனால், சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் வட்டார நூலகம், அந்த ஞாயிற்றுக்கிழமையின் காலை, உற்சாகப் புயலில் சுழன்றது. அட்டையில் உருவான யானையின் தந்தங்களை ஊதிக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன். தொங்கிக்கொண்டிருந்த காகிதப் பட்டாம்பூச்சிகளிடம் பேசிக்கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தார்கள் நிறைய குழந்தைகள். ‘வாசக சாலை’ அமைப்பு, குழந்தைகளுக்காக நடத்தும் நிகழ்ச்சியில்தான் இந்த உற்சாக வெள்ளம்.

‘‘எல்லோரும் உட்காருங்க... கதை ஆரம்பிக்கப்போகுது’’ என்றதும், சேட்டையில் இருந்தவர்கள் ஓடிவந்து உட்கார்ந்தார்கள். ‘‘முதல்ல நீங்க உங்களுக்குத் தெரிஞ்ச கதை, பாட்டு எல்லாம் சொல்வீங்களாம். அப்புறம், உங்களுக்குக் கதை சொல்ல ஒருத்தர் வருவாராம்’’ என்றதும், சில சுட்டிகள் முன்வந்து அழகாக கதை சொன்னார்கள்; பாட்டு பாடினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick