“மியூசிக் டைரக்டர் ஆகப்போகிறேன்!” - ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2’ சஹானா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குட்டீஸ்களின் ஃபேவரைட், ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்’. இதன் சீசன் 2 நிகழ்ச்சியில், தன் இனிமையான குரல் மற்றும் பியானோ வாசிப்பால் கவர்ந்தவர், சஹானா. பார்வை இல்லாதது குறையல்ல எனத் தன்னம்பிக்கையுடன் வலம்வந்து, இரண்டாவது ரன்னர்அப்பாக தேர்வான இந்தக் குட்டித் தேவதையைச் சந்திப்போமா...

‘‘ஹாய் அக்கா... நான் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். என் தம்பி பெயர் ஆதிக். நான் நாலு வயசிலிருந்தே மியூசிக் கத்துக்கிறேன். திவ்யலட்சுமி மிஸ்தான் எனக்குப் பாட்டு சொல்லிக்கொடுக்கறாங்க. தினேஷ் மாஸ்டர்கிட்ட கீ-போர்டு கத்துக்கிறேன். சரிகமப லிட்டில் சாம்ப்ஸில் மூன்றாவது பரிசு வாங்கியிருக்கேன். என் அம்மா ஸ்ரீலோகினிக்கு பூர்வீகம், ஸ்ரீலங்கா. அப்பாவுக்குத் தமிழ்நாடு. பிறக்கும்போதே என் கண்கள் மூடித்தான் இருந்துச்சாம். விஷயம் தெரிஞ்சு அம்மா ரொம்ப அழுதாங்களாம். அப்பாதான் ஆறுதல் சொல்லியிருக்கார். கண் தெரியாத குறையே எனக்கு வரக்கூடாதுன்னு பார்த்து பார்த்து வளர்த்தாங்க. ஐ லவ் மம்மி... ஐ லவ் டாடி’’ எனப் புன்னகைக்கிறார் சஹானா.

‘‘சஹானாவுக்கு சின்ன வயசுல விளையாட பொம்மை வாங்கிக்கொடுக்கிற மாதிரிதான் கீ-போர்டும் வாங்கிக்கொடுத்தேன். சவுண்டுகளை ஈஸியா அடையாளம் கண்டுபிடிச்சுடுவா. அதனால், கீ-போர்டு கத்துக்கொடுக்க அனுப்பினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick