சுட்டி மெயில்

பேபி மானஸ்வி, பேபி நைனிகா என நடித்துக்கொண்டும் படித்துக் கொண்டும் அசத்தும் சுட்டிகளைப் படிப்பது எங்களுக்கும் ஊக்கமளிப்பதாக இருந்தது.

- எஸ்.ஷெரின் தாஜ், திருச்சி-5.


ராஜே வரைந்து எழுதும் மூன்று கில்லாடிகள், மற்றும் நொர்ணி நரிஜி, வேதாளம் புதிது, ஜீபாவின் சாகசம் ஆகிய படக்கதைகள் படிக்க சுவாரஸ்யமாகவும் படங்கள் அருமையாகவும் இருக்கின்றன.

- வ.இளங்கோ, ஈரோடு.

சுட்டி விகடனில் வெளியாகும் தெரியுமா தலைப்பிலான தகவல்கள் எங்கள் பள்ளியில் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் சொல்ல உதவுகின்றன.

- கி.சிவஞானம், கொழுமம் அஞ்சல், திருப்பூர்.

சுட்டி க்ரியேஷனில் வந்த பறக்கும் தட்டு மிகவும் அருமை.பறக்கும் தட்டைப் பற்றிய தகவல்களும் சுவாரஸ்யமாக இருந்தது நன்றி!

- கே.ஆர்.இரவீந்திரன், சென்னை-1

ண்ணா நீ இங்கே வேலம்மாள் இணைப்புப் பள்ளி சுட்டிகளின் வேடம் அருமை. ஜீபாவின் ஏ.டி.எம் கொள்ளை படக்கதையின் ஓட்டம் சிறப்பு.

- ஆர்.சாத்விகா, புதுச்சேரி-8

முன்னொரு காலத்தில் தபால் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டபோது குழந்தைகளுக்கும் முத்திரையிட்டு தபாலில் அனுப்பியதை நினைத்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. அதே போல ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டி ஏன் இல்லை என்ற தகவலும் புதிதாக இருந்தது.

- த.தீபேஷ், தேவனானாங்குறிச்சி, திருச்செங்கோடு.

சுட்டி விகடனில் வெளியாகும் இந்த நாள் தகவல்கள் அனைத்தும் பொதுஅறிவினை மேம்படுத்த மிகவும் உதவுகிறது.

- பா.இளவரசி, நெல்லிக்குப்பம்.


ன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண், மின் அஞ்சல் முகவரியைக் குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால்தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடமிருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.


சுட்டி மெயிலில் இடம்பெற்ற சுட்டிகள் அனைவருக்கும்  காம்கேர் கே.புவனேஸ்வரி எழுதிய ‘கம்ப்யூட்டர் A-Z’  என்ற புத்தகம் பரிசு.

சுட்டி மெயில் பகுதிக்கு எழுதும் கடிதத்தில், முகவரியோடு தங்களின் செல்போன் எண்ணையும் தவறாமல் குறிப்பிடவும்.


தெரியுமா?

* தமிழ்நாட்டில் அதிகளவு சிமென்ட் உற்பத்திசெய்யப்படும் மாவட்டம் அரியலூர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick