டெக் பிட்ஸ் | Technology information for kids - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

டெக் பிட்ஸ்

எக்ஸ் மேன் - டார்க் ஃபீனிக்ஸ்!

மார்வெல் காமிக்ஸின் அடுத்த பிரமாண்டமான படைப்பாகக் களமிறங்க உள்ளது எக்ஸ் மேன் - டார்க் பீனிக்ஸ். விண்வெளிக்குச் செல்லும் பயணம் தவறாகிப் போன பின்பு ஃபீனிக்ஸின் மொத்த சக்தியும் வெளிப்படும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. எக்ஸ் மேன் சீரிஸில் பன்னிரண்டாவது படமாக வெளியாக உள்ள இப்படத்தை ட்வென்டித் செஞ்சுரி ஃபாக்ஸ் தயாரிக்க சைமன் கின்பெர்க் இயக்குகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை அடுத்த வருடம் பிப்ரவரி 14-ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

[X] Close

[X] Close