உலகம்

மிரளவைத்த ஹாங்காங் அணி!

க்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி முதல் போட்டியை ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாடியது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் குவித்திருந்தது., இரண்டாவதாகக் களமிறங்கிய ஹாங்காங் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் சேர்ந்து, முதல் விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து இந்திய ரசிகர்களைப் பீதியில் ஆழ்த்தினர். அதன்பின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு வழியாக 26 ரன்களில் போட்டியை வென்றது இந்திய அணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!