இந்தியா | Latest News in India - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

இந்தியா

இஸ்ரோவுக்கு கட்டணம் செலுத்தும் இங்கிலாந்து!

சமீபத்தில், இந்தியாவின் PSLV ஏவுகலம் விண்ணுக்குச்சென்றது, இரண்டு செயற்கைக்கோள்களை அவற்றின் சுற்றுவட்டப்பாதையில் அமைத்தது.

இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? அந்த இரண்டு செயற்கைக்கோள்களும் இந்தியாவினுடையவை இல்லை; இங்கிலாந்தினுடையவை.

அதாவது, வழக்கமாக இந்திய செயற்கைக்கோள்களை விண்ணுக்குக் கொண்டுசெல்லும் PSLV ஏவுகலம், இந்த முறை வெளிநாட்டு செயற்கைக்கோள்களைக் கொண்டுசென்றிருக்கிறது. இதற்காக அந்த இங்கிலாந்து நிறுவனம், ISRO-வுக்குப் பல கோடி ரூபாய் கட்டணமாகச் செலுத்தியிருக்கிறது.

பொதுவாக, விண்வெளி ஆராய்ச்சி என்பது போட்டிகள் நிறைந்த களம், மிகச் சிறப்பான தொழில்நுட்ப அறிவுள்ள நாடுகள்தான் அதில் ஈடுபடும். அப்படிப்பட்ட ஒரு துறையில், பிற நாடுகள் தங்களுடைய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு நம்முடைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு நாம் முன்னேறியிருக்கிறோம்.

[X] Close

[X] Close