ஆயிரம் அம்புகள் எய்து அசத்திய சஞ்சனா!

சாதனை

வில்வித்தையில் உலக சாதனை செய்திருக்கிறார், மூன்றே வயதான சஞ்சனா. மூன்றரை மணி நேரத்துக்குள் 1,111 அம்புகளை எய்து இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார். எம்.ஜி. ஆர் ஜானகி கல்லூரியில்,  பயிற்சியிலிருந்த சஞ்சனாவைச் சந்தித்தோம். துறுதுறுவென சேட்டை செய்து கொண்டிருந்தவரின் கைகளில் வில் கொடுக்கப்பட்டதும், இலக்கை குறிவைத்து சரியாக அம்பை எய்து அசரவைக்கிறார்.

சஞ்சனாவின் அம்மா ஸ்வேதா, ‘`இரண்டு வயசுல சஞ்சனாவுக்குப் பிறந்தநாள் கொண்டாடினோம். அப்போ, ஒரு விளையாட்டு வில் அவளுக்குப் பரிசா கிடைச்சது. மற்ற பொருள்களைத் தவிர்த்து, எப்பவும் அந்த வில் வெச்சே விளையாட ஆரம்பிச்சா.  யார்கிட்டேயும் அதைக் கொடுக்க மாட்டா. அவளின் ஆர்வத்தைப் பார்த்து, வில்வித்தை கோச்சிங்கில் சேர்க்கலாம்’னு இருந்தோம். அப்போது ஷிஹான் ஹுசைனி பற்றிக் கேள்விப்பட்டு அவரைச் சந்திச்சோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்