சுட்டி ஸ்டார் நியூஸ்!

நீல ரோஜா!

ரோஜா பூக்களில் சிவப்பு, வெள்ளை, மஞ்சள் எனப் பார்த்திருப்பீர்கள். நீல ரோஜா பார்த்திருக்கிறீர்களா? விஞ்ஞான தொழில்நுட்பத்தின் அடுத்த சாதனை, இந்த நீல ரோஜா. ஜப்பானியர்களின் மூளையில் உருவான இந்த ரோஜா, முதன்முறையாக, 2011-ம் ஆண்டு அமெரிக்கா, கனடா நாடுகளில் விற்பனைக்கு வந்தது. ஒரு வகை நீலப் பூவின் மூலக்கூறுகளை ரோஜாவில் இணைத்து, இந்தப் பூவை உருவாக்கினர். இதற்கு முன்பு, வெள்ளை ரோஜாவில்தான் நீலச் சாயந்தைப் பூசுவார்கள். ஜப்பான் நாட்டின் ‘சண்டோரி லிமிடெட்’ என்ற நிறுவனம், 20 ஆண்டுகள் முயன்று செடியிலேயே உருவாக்கிய இந்த நீல ரோஜாவின் விலையும் அதிகம்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick