வலசை போகும் வண்ணத்துப் பூச்சிகள்!

இயற்கைபேரா.சோ.மோகனா

றவைகள் வலசைபோவதை, மீன்கள் வலசை போவதைப்பற்றி பாட புத்தகத்தில் படித்திருக்கிறோம். ஆனால், வண்ணத்துப் பூச்சிகள் வலசை போவதைப்பற்றிப் படித்திருக்கிறோமா? இது என்ன புதுக்கதையா இருக்குதுன்னு பார்க்கிறீர்களா? உண்மைதான்! அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வாழும் மோனார்க்  வண்ணத்துப்பூச்சிகள் வலசை போவதற்கு புகழ்பெற்றவை. அதுவும் எவ்வளவு தூரம் தெரியுமா? சுமாராக 4,828 கிலோ மீட்டர்கள். நினைத்துப்பார்க்கவே ஆச்சர்யமா இல்லை!

மொனார்க் வண்ணத்துப்பூச்சியின் வாழ்நாளோ 6-8 வாரங்கள்தான், எடை 0.25-0.75 கிராம்தான்.  ஒரு கிராம் எடை கூட இல்லை. இந்தப்  பூச்சி சுமார் 4800 கி.மீ பறந்து பயணிக்கிறது என்றால் வியப்பாக இல்லையா?

முதுகெலும்பில்லாத இந்த வண்ணத்துப்பூச்சிக்கு ஏன் மோனார்க்  என்ற பெயர் வந்தது தெரியுமா? வண்ணத்துப் பூச்சிகளின் மிகவும் அழகானது இந்த மொனார்க்  வண்ணத்துப் பூச்சி. மேலும் மோனார்க்  என்பதற்கு ஆளும் அரசன் என்று பொருள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick