வீடியோ கேம் ராஜாக்கள்! - சீசன் - 2 | Ralph Breaks the Internet - upcoming American 3D computer-animated comedy film - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/10/2018)

வீடியோ கேம் ராஜாக்கள்! - சீசன் - 2

சினிமா

வ்வொரு முறை வீடியோ கேமில் நமக்குப் பிடித்த விளையாட்டை விளையாடி முடித்ததும், அந்த வீடியோ கேமில் வரும் கதாபாத்திரங்கள் என்ன ஆவார்கள் என யோசித்ததுண்டா ஃப்ரெண்ட்ஸ்? நாம் வீடியோ கேமை ஆஃப் செய்ததும், அவர்கள் என்ன செய்வார்கள்? வேகமாய் ஓடிக்கொண்டிருந்த வாகனங்கள் எல்லாம் என்ன ஆகும்? அதிலிருந்த நமது ஆதர்ச கதாபாத்திரங்கள் நிலை என்ன, என்றெல்லாம் சிந்தித்ததுண்டா? ரொம்ப கன்னத்துல விரல் வச்சுட்டு யோசிக்க வேண்டாம் குட்டீஸ். அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.

ஆனா, அப்படி இருந்தா எப்படி இருக்கும். அது தான் அனிமேஷன் படமான ரேல்ஃப் சீரிஸ்.  ஃபிக்ஸ் - இட் ஃபெலிக்ஸ் ஜூனியர் (Fix-It Felix Jr) விளையாட்டில் இருக்கும் ரேல்ஃப் தான் நம் ஹீரோ. அந்த மெகா சைஸ் பையன் கேமில் வில்லனாக இருந்தாலும், ரொம்ப நல்லவன். சுகர் ரஷ் என்னும் கார் ரேஸ்  விளையாட்டில் இருக்கும் வென்னலோப் தான் நாயகி. லிட்வாக் என்னும் வீடியோ கேம் கடையில் இருக்கும் இந்த வீடியோ கேம் ஸ்டேஷன்கள்தான் படத்தின் மொத்த பலமும். மக்கள் விளையாடி விட்டுச் சென்றதும், இவர்கள் அனைவரும் செய்யும் லூட்டிகள்தான் முதல் பாகத்தின் கதை. முதல் பாகமே தெறி ஹிட் அடிக்க, தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது Ralph Breaks the Internet ரேல்ஃப் பிரேக்ஸ் தி இன்டர்னெட் திரைப்படம்.

[X] Close

[X] Close