கார்ட்டூனிஸ்ட் புதியா! | Young cartoonist girl Puthiya and her cartoon business - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/10/2018)

கார்ட்டூனிஸ்ட் புதியா!

பிசினஸ்

பெயருக்கு ஏற்ற புதுமையான விஷயங்கள்தாம் இந்த `புதியா’ சுட்டியின் ஸ்பெஷல். ஃபேஸ்புக் மூலம் தனக்கு வந்த கார்ட்டூன் ஆர்டருக்கு என்ன மாதிரியான நிறத்தேர்வு, என்ன டிசைன் வேண்டும் என கஸ்டமர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார் புதியா.

“ஹாய்... வாங்க... வாங்க. முதல்ல நான் உருவாக்கின கார்ட்டூன் கேரக்டர்ஸை மீட் பண்ணுங்க. தி(Thee), தியா(Diya), போ(Poo), உதி (Uthi) இதுதான் இவங்க பெயர். எனக்கு கார்ட்டூன்ஸ் ரொம்பப் பிடிக்கும். ஆரம்பத்தில், நான் பார்க்கும் கார்ட்டூனை வித்தியாச வித்தியாசமான வண்ணங்களில் பெயின்ட் செஞ்சு வீட்டுச் சுவரில் ஒட்டுவேன். ஒரு நாள் அப்பாவோடு கடைக்குப் போயிருந்தேன். ஒரு அங்கிள், காபி மக்கில் அவர் பொண்ணுக்குப் பிடிச்ச கார்ட்டூனை பிரின்ட் செஞ்சு தரும்படி சொல்லிட்டிருந்தர். அதைக் கேட்டதும், என்னுடைய கார்ட்டூன் கேரக்டரஸ்ஸையும்  டிஜிட்டலாக மாற்றலாம்னு அப்பாகிட்ட சொன்னேன். அப்பாவும் அதை ஒரு ஸ்டூடியோவில் கொடுத்தார். என் பெயர் போட்டு ஒரு புக் மார்க் தயார்செய்து கொடுத்தாங்க.’’ என உற்சாகமாகச் சொல்கிறார் புதியா.