சுட்டி மெயில்

சுட்டி விகடன் இதழுடன் கொடுத்த ‘சென்னை டே’ இன்ஃபோ புக் மிகவும் அருமை. சென்னையைப் பற்றிய பல பயனுள்ள தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.

- ப.மிருதுளா, கன்னியாகுமரி.

நொர்ணி நரிஜி, விக்ரம் வேதாளம், ஜீபாவின் சாகசம், மூன்று கில்லாடிகள் இது போன்ற படக்கதைகள் படிக்க எளிதாவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது.

-ஆ.புவியரசன், சித்தோடு.

பழங்குடியினர் கதையாக வந்த பூசணிக்குழந்தைகள் படிக்க சிரிப்பாகவும் ஓவியத்தைப் பார்க்க சுவாரஸ்யமாகவும் இருந்தது. இது போன்ற கதைகள் எங்கள் கற்பனைத் திறனை வளர்க்கும்.

-ஆர்.அக்‌ஷய், அன்னூர்.

மூணு கிலோமீட்டர் படக்கதையும், நாங்க இருக்கோம் போட்டோ காமிக்ஸும் வெகு அருமை. சேலம் 150 நிகழ்ச்சி அருமையான தொகுப்பு.

-ச.மெய்ப்பொருள் கிருஷ்ணா, பட்டீச்சுரம்.


 ரீவைண்டு பகுதியில் வரும் சிரிக்க சிரிக்க சரித்திரம் வரலாற்றின் பெருமையை நம்பமுடியாத நி்கழ்வுகளை நினைவூட்டுவதாக உள்ளது.

-மு.ஜாய் ரீட்டா, ஆவடி, சென்னை-62.

ஒரு படம், ஒரு கேம், ஒரு புக், ஒரு ஆஃப் எனத் தனித் தனியே சின்னச் சின்ன செய்திகளாக வரும் டெக் பிட்ஸ் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. எல்லாமே புதுப் புதுத் தகவலாக இருப்பது சிறப்பு.

- ஜி.இனியா, கிருஷ்ணகிரி.

 சுட்டி ஸ்டார்கள் எழுதி இருந்த  குட்டிக் கதைகள் எல்லாமே படிக்க சுவாரஸ்யமாக இருந்தன. ஏற்கெனவே தெரிந்த கதைகள் என்றாலும் மாற்றிச் சொல்லியிருந்த விதம் அருமை.

- எஸ்.பி.முகேஷ், ஈரோடு-9.


சுட்டி மெயிலில் இடம்பெற்ற சுட்டிகள் அனைவருக்கும் காம்கேர் கே.புவனேஸ்வரி எழுதிய ‘கம்ப்யூட்டர் ‘A to Z’ என்ற புத்தகம் பரிசு.

சுட்டி மெயில் பகுதிக்கு எழுதும் கடிதத்தில், முகவரியோடு தங்களின் செல்போன் எண்ணையும் தவறாமல் குறிப்பிடவும்.


ன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண், மின் அஞ்சல் முகவரியைக் குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால்தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடமிருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.


தெரியுமா?

* பக்த மீரா திரைப்படத்தில் மீராவாக நடித்தவர் கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick