இந்தியா | Latest News in India - Chutti Vikatan | சுட்டி விகடன்

இந்தியா

கற்றதை செயலில் காட்டிய ஜென்!

பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில் அவ்வப்போது தீயணைப்பு விழிப்பு உணர்வு முகாம்கள் நடைபெறும். திடீரென்று நெருப்புப் பற்றிக்கொண்டுவிட்டால் என்ன செய்யவேண்டும், எப்படித் தப்பவேண்டும் என்று விளக்கிச்சொல்வார்கள். கேட்கும் எல்லாரும் சலிப்போடு தலையாட்டிவிட்டு வீட்டுக்குப்போவார்கள்.

இப்படிச் சொல்லித்தரப்படும் விஷயங்களை அக்கறையோடு கற்றுக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் ஜென்.  அதுவும் பத்து வயது மாணவி.

இவர் மும்பையில் பல உயிர்களை விபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார். 6-ம் வகுப்பில் படிக்கிற இவருடைய வீட்டில் சமீபத்தில் திடீரென்று தீ பிடித்துவிட்டது. என்ன செய்வதென்று புரியாமல் எல்லாரும் பதறினார்கள்.

ஆனால், ஜென் மட்டும் நிதானமாக எல்லாரையும் வழிநடத்தி... யாருக்கும் ஆபத்தில்லாமல் வெளியேற்றியிருக்கிறார், தீயணைப்புத் துறையினரை வரவழைத்து நெருப்பை அணைத்திருக்கிறார். ‘இதெல்லாம் எப்படி உனக்குத் தெரியும்?’ என்று பிறர் வியப்போடு கேட்க, ‘எல்லாம் பள்ளிக்கூடத்துல கத்துக்கிட்டதுதான்’ என்று பெருமையோடு சொல்லியிருக்கிறார்.

இதுபோன்ற நெருக்கடிநேரச் செயல்பாடுகளை எல்லாரும் கற்றுக்கொள்வது நல்லது. என்றேனும் அது நம் உயிரைக் காக்கும்!       

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick