சதுரங்கத்தில் கலக்கும் அஜய்! | Ajay crowned the champion - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/09/2018)

சதுரங்கத்தில் கலக்கும் அஜய்!

சென்னை, கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் உள்ள பூங்காவில்  விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அருகே சென்று “இங்கே அஜய்னு...’’ என முடிப்பதற்குள்,  ‘`நம்ம செஸ் சாம்பியன்தானே வாங்க’’ என உற்சாகமாக அழைத்துச் செல்கிறார்கள்.

பூங்காவுக்கு எதிரில்தான் அஜய் வீடு இருந்தது. வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பதக்கங்களும் கேடயங்களும் நிறைந்திருந்தன. அஜய், சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த நேஷனல் சப் ஜூனியர் செஸ் டோர்னோமென்ட்டில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார்.

“அண்ணா, என் அப்பா கார்த்திகேயன், சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அம்மா வித்யா, ஐ.டி-யில் வொர்க் பண்ணினவங்க. இப்போ எனக்காக வேலையை விட்டுட்டு என்னை கவனிச்சுக்கிறாங்க. இது என் செல்லமான தங்கச்சி சஞ்சனா’’ என அறிமுகப்படுத்துகிறார்.

[X] Close

[X] Close