தமிழ்நாடு | Tamilnadu Latest News - Chutti Vikata | சுட்டி விகடன்

தமிழ்நாடு

ஜெ.ரவி

மீண்டும், மீண்டும் நிரம்பிய மேட்டூர் அணை!

கா
விரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நடப்பாண்டில் 4-வது முறையாக நிரம்பியது. தென்மேற்குப் பருவமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை, ஜூலை 23-ம் தேதி முழுகொள்ளளவான 120 அடியை எட்டி, நடப்பாண்டில் முதல் முறையாக நிரம்பியது. இதன் பிறகு மீண்டும் மழை பெய்ததால், கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி 2-வது முறையாகவும் ஆகஸ்ட் 21-ம் தேதி 3-வது முறையாகவும் மேட்டூர் அணை நிரம்பியது. தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து நீர்த் திறப்பு அதிகரித்ததால், ஆகஸ்ட் 31-ம் தேதி 4-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick