நிஜங்கள் சொல்லும் கதை ராணி! | Business kid Athithi - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

நிஜங்கள் சொல்லும் கதை ராணி!

‘நான்யாரைப் பார்த்தாலும் அவங்ககிட்ட இருக்கும் ஒரு நல்ல விஷயத்தை எடுத்துப்பேன். அதுபற்றி என் ஃப்ரெண்ட்ஸுக்கும் சொல்வேன். அதுதான் என் பிளஸ்’’ என்று புன்னகையுடன் ஆரம்பிக்கிறார் அதிதி.

ஆறாம் வகுப்பு மாணவியான இவர், `டைம்பஸ்’ என்ற ஆன்லைன் நிறுவனத்தைத் தொடங்கி, சிஇஓ-வாகச் செயல்பட்டு வருகிறார். சிறிய அளவில் வணிகம் செய்பவர்களுக்கான விளம்பரங்களை,  வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப படங்கள், கதைகளாக உருவாக்கித் தருவதே அதிதியின் பிசினஸ். அதற்காக, CIMSE (Chamber of Indian Micro Small and Medium Enterprises) வழங்கிய இளம் தொழில்முனைவோருக்கான விருதையும் பெற்றுள்ளார் இந்தச் சுட்டி.