செய்தி சொன்ன கானமயில் | Environment story - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

செய்தி சொன்ன கானமயில்

ரந்த பாலை நிலப் பகுதியில் உதித்த சூரியனின் இளஞ்சூட்டை உள்வாங்கிக்கொண்டே, கேர் பழங்களைப் பறிக்க, தன் தோழியோடு கிளம்பினாள் சல்மா. அவள் பாட்டி, அந்தப் பழங்களைக் காயவைத்து ஊறுகாய் செய்துகொடுப்பார்.

ஒட்டகக்குட்டியுடன் எதிரே ஜோகா  வருவதைப் பார்த்து, ‘‘ஜோகா, குட்டிதான் வருது. அம்மா எங்கே?’’ என்று கேட்டாள்.

‘‘பின்னாடி அப்பாவோடு வருது. எங்கே போறே?’’

‘‘கேர் பழங்களைப் பறிக்க. நீயும் வர்றியா? ஜட்டா லாலையும் காட்டுக்குள் கொஞ்ச தூரம் கூட்டிட்டுப் போலாம். உன் அப்பாகிட்ட நான் கேட்கறேன். காட்டுக்குள் அந்த அதிசயப் பறவையை இன்னொரு தடவைப் பார்க்கணும்னு போலிருக்கு’’ என்றாள் சல்மா.