வணக்கம் | Editorial page - Chutti Vikatn | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

வணக்கம்

கோடை விடுமுறை குதூகலத்தில் இருக்கும் உங்கள் மகிழ்ச்சியை மேலும் பல மடங்கு உயர்த்த, புதுப்பொலிவுடன் மெகா பரிசுப் போட்டிகளுடன் இதோ உங்களுடன் இணைகிறது சுட்டி விகடன்.

உங்கள் துப்பறியும் மூளைக்கு, நுணுக்கமான அறிவுக்கு, வார்த்தை விளையாட்டுக்கு, பொறுமையான தேடலுக்கு என்று விதவிதமான போட்டிகள், சவால்கள், அட்டகாசமான பரிசுகள் உள்ளே காத்திருக்கின்றன.

சுட்டி விகடனின் சூப்பர் படைப்பாளர்களான முன்னாள், இந்நாள் சுட்டி ஸ்டார்களே தயாரித்த சிறப்புப் பக்கங்கள், அறிவுப் பொக்கிஷமாகப் பல்வேறு பகுதிகள், செய்து மகிழ அழகழகான கிராஃப்ட் என்று விடுமுறையைக் கொண்டாட்டமாக்க பக்கத்துக்குப் பக்கம் உற்சாக ஐஸ்க்ரீம் காத்திருக்கிறது. ரசித்துப் படியுங்கள். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை அள்ளிக் குவியுங்கள்.

அன்புடன்

ஆசிரியர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க