பொதுத் தேர்தல் 2019 தெரிஞ்சுகிட்டா தப்பில்லை! | 2019 Election Information - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

பொதுத் தேர்தல் 2019 தெரிஞ்சுகிட்டா தப்பில்லை!

பொன்.திருமலை

லகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, இந்தியா. இங்கு நடைபெறும் தேர்தல் பற்றி தெரிந்துகொள்வோம்!

● தேசத்தின் 17-வது மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 11-ல் தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. மே 23-ம் தேதி, வாக்குகள் எண்ணப்படும்.

●இந்தத் தேர்தலில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.

●இந்தியாவில் மொத்த வாக்காளர்கள் 90 கோடி பேர். இவர்களில் ஒன்றரை கோடி பேர், முதல்முறை வாக்களிக்கும் உரிமை (18–19 வயதுக்குட்பட்டவர்கள்) பெற்றவர்கள்.

●நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

●தமிழகத்தின் 39 மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றம் என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க