விண்ணைத் தொட்ட கலாம்சாட் 2 | Kalamsat-V2 Launched By ISRO From Sriharikota - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

விண்ணைத் தொட்ட கலாம்சாட் 2

றாவது முறையாக, ஜனவரி 24-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது பி.எஸ்.எல்.வி ராக்கெட். ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கவுன்ட் டவுன் தொடங்கியதுமே, கலாம் சாட்-2 என்ற செயற்கைக்கோளைத் தயாரித்த குழு, பரபரப்பும் பரவசமும் பெற்றது.

‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ நிறுவனம் மூலமாக 15 மாணவர்கள் இணைந்து தயாரித்ததுதான், ‘கலாம்சாட்-2’ செயற்கைக்கோள். இஸ்ரோ மூலம் ஏவப்படும் மாணவர்கள் தயாரித்த முதல் செயற்கைக்கோள் இது.  18 முதல் 20 வயதுள்ள மாணவர்கள்  தயாரித்தது. இந்தக் குழுவைச் சேர்ந்த ரிஃபாத் ஷாரூக், சுட்டி விகடனின் சீனியர் சுட்டி ஸ்டார் என்பது சிறப்பு.