மூன்று கை மாயக்காரன்! - விடுகதை | Puzzles - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

மூன்று கை மாயக்காரன்! - விடுகதை

ன்றும் அலுக்காத விஷயங்களில் விடுகதைகளும் உண்டு. இதோ சில...

1. பூத்தபோது மஞ்சள், காய்ந்தபோது சிவப்பு, பழுத்தபோது கறுப்பு! - அது என்ன?

2. அழகழகாய் பூப்பூக்கும்; அம்மாடின்னு அழவைக்கும்! - அது என்ன?

3. தண்ணீர் இல்லாமல் வளரும்; தரையில்லாமல் படரும்! - அது என்ன?

4. ஊர்ந்துச் செல்லும் பாம்பு அல்ல: வீட்டைச் சுமக்கும் ஆமை அல்ல!- அது என்ன?

5. மூன்று கை மாயக்காரன்; சுழன்றுக்கொண்டே இருக்கும் கைகளுக்குச் சொந்தக்காரன்- யார் அவன்?

6. பூட்டு இல்லை சாவி இல்லை பெட்டியும் இல்லை; ஆனால், நீரைச் சேமிக்கும் மென்மைக்காரி! - யார் அவள்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க