நம்ம திருநெல்வேலியை நல்லா தெரிஞ்சுப்போம்! | Kids info book conversation - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

நம்ம திருநெல்வேலியை நல்லா தெரிஞ்சுப்போம்!

ங்கள் மாவட்டத்தை அறிந்துகொள்ளுங்கள் (Know your District) என்ற தலைப்பில், ஒவ்வொரு மாவட்டம் பற்றியும் 200 தகவல்கள் கொண்ட  இணைப்பிதழ் சுட்டி விகடனில் வெளியாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நீட் மற்றும் இதரப் போட்டித் தேர்வுகளில் பயன்படுத்தும் OMR ஷீட், வினாத்தாள் மூலம் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டு, பரிசும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன. சேலம், சென்னை, மதுரை, தருமபுரியைத் தொடர்ந்து, திருநெல்வேலியிலும் நடந்தது.

இந்தத் தேர்வில் நெல்லை மாவட்டத்தின் 13,000-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றார்கள். அவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வு எழுதிய வெற்றியாளர்களைக் கௌரவிக்கும் பரிசளிப்பு விழா 23.01.2019  அன்று நடைபெற்றது.