போரும் சமாதானமும் | Short Story - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

போரும் சமாதானமும்

சுற்றுச் சூழல் கதை

முகிலனின் மாமா செழியன் ஊர் ஊராகப் பயணிப்பவர். சில சமயங்களில் முகிலனையும் அழைத்துச் செல்வார். முகிலனின் அக்கா அகிலாவுக்கும் அப்படிப் பயணிக்க ஆசை. இந்தமுறை இருவரையுமே அழைத்து வந்திருந்தார். அகிலாவுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. வால்பாறையின்  பழங்குடியின மக்கள் குடியிருப்பே அவர்கள் சென்ற இடம்.

அங்கேயே பிறந்து வளர்ந்த காட்டரசு என்ற சிறுவனுடன் சேர்ந்து இருவரும் அங்கிருந்த விதவிதமான பறவைகளை ரசித்தனர். அப்போது இருவாச்சியைப் பார்த்தார்கள். இருவாச்சிகள் உயரமான மரங்களில்தான் வாழும் என்று மாமா சொல்லியிருக்க, இதுவோ தாழ்வான மரத்தில் உட்கார்ந்திருந்தது.

அது பறந்துசென்றதும் அகிலாவும் பின்தொடர்ந்து ஓடினாள். அதைப் பார்த்து காட்டரசும் போனான். கீழே கிடந்த கழிவுகளை உருண்டைப் பிடிக்கும் சாண வண்டுகளைப் பார்த்துக்கொண்டிருந்த முகிலன், இவர்கள் போவதைக் கவனிக்கவில்லை.

அகிலா நீண்ட தூரம் காட்டுக்குள் சென்றுவிட்டாள். அவளை விரட்டிப் பிடித்த காட்டரசு, ‘‘அகிலா நில்லு! முகிலன் அங்கே தனியா...’’ என்று சொல்லிக்கொண்டே சட்டென பேச்சை நிறுத்தினான். வேறு யாரோ பேசுவது கேட்டது.